Sunday, December 5, 2010

மாமியாரும் கர்ப்பம்

அவன் அடிக்கடி ஆபீஸ் வேலையாக வெளியூர் செல்பவன். அவன் மனைவி கருவுற்றபோது, அவளுக்கு யாரையாவது துணைக்கு வைத்துவிட்டு செல்லவேண்டுமே? அவளுக்கு ஒரு ஐடியா. “ஏங்க, எங்க கிராமத்துல தான் ஆஸ்பத்திரி கிடையாதே – அதனால எப்படியும் பிரசவம் இங்க தான் பாக்கணும். இப்பவே எங்க அம்மாவை இங்க அழைச்சிகிட்டு வந்திடுங்களேன். பிரசவம் வரிக்கும் இங்கயே இருந்து பாத்துப்பாங்க.” என்றாள். நானும் உடனே அவங்க கிராமத்துக்குப் போய் என் மாமியார், மாமனாரிடம் எங்க விருப்பத்தத் தெரிவிச்சேன். மாமனார் நிலம் நீச்சு காடு கழனி இதல்லாம் பாத்து பயிர் செய்வதுலயே மும்முரமா இருந்துடுவார். “தாராளமா கூட்டிகிட்டு போங்க மாப்பிள” என்று அனுமதி தந்தார். எங்க ஊருக்கு வரக்கொள்ள மாமியாரிடம்

“நீங்க இல்லாம அவர் என்ன செய்வார்? “ –ன்னு கேட்டேன்.

“ஆமா இருந்தாமட்டும் என்ன? அவருக்கு வயல்ல வேல செய்யற சின்னப் பொண்ணுகள் இருக்கவே இருக்காங்க”

நான் ‘அப்ப உங்களுக்கு வயல்ல வேலை செய்யற கூலியாளுங்களா?” –ன்னு கேக்கல, நமக்கு ஏன் பொல்லாப்பு?

ரெண்டு மூணு மாசம் கழிச்சி அவன் ரொம்ப சோகமா இருக்கப்ப அவன் ஃப்ரெண்டு ஒத்தன் வந்துசேர்ந்தான். அவனுக்கு மனைவியப்பாத்துக்க மாமியார கூட்டிகிட்டு வந்த விவரம் தெரியும. “என்னடா மச்சி, ஏன் சோகமா இருக்க? உன் மனைவிக்கும் அவங்க அம்மாவுக்கும் ஒத்துப்போகலியா?”

இவன் பதில் சொன்னான்: “ ரொம்ப ஒத்துப் போயிடிச்சிப்பா. இப்ப என் மாமியாரும் கர்ப்பம்.”

No comments:

Post a Comment